வெள்ளாளர் (Vellalar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் பயன்படுத்தும் பெயராகும். ஆறுநாட்டு வேளாளர், சோழிய வெள்ளாளர், கார்காத்த வேளாளர், கொங்கு வேளாளர், சைவ வெள்ளாளர், துளுவ வெள்ளாளர் மற்றும் இலங்கை வெள்ளாளர் ஆகிய சமூகங்கள், தங்களை ஒரு வேளாளராக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.[2][3] 13 ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி வரை 600 ஆண்டுகளாக இவர்கள் தமிழ் விவசாய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்திய சமூகங்களாகவும், அரசியல் அதிகாரத்திலும் இருந்தனர்.